ஆசிரியர்கள் போராட்டத்தில் 13 பெண்கள் உட்பட 38 பேர் கைது! கொழும்பில் பதற்றமான நிலை..
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 13 பெண்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகபிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி 4 பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் இன்று கொழும்பிற்குள் பிரவேசித்திருந்தன.
இதனைத் தொடர்ந்து காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இவர்கள் காலி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின்
கைது சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்பில் பெரும் பதற்றநிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.