ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய திட்டம்

ஆசிரியர் - Admin
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய திட்டம்

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை தோற்கடிப்பதற்காக செயற்பட்ட அமைச்சர்களின் தேர்தல் தொகுதிகளுக்கு சென்று அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்ட ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விலையை அதிகரித்து மக்களை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த வேலைத் திட்டத்தை இன்று முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்காக சிறிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Radio