பாதுகாப்பு முன்னாயத்தங்கள் இறுக்கப்படாவிட்டால் அடுத்த 4 வாரங்களில் கொரோனா 4வது அலை..! எச்சரிக்கும் மருத்துவர்கள்..
நாட்டில் பிசிஆர் சோதனைகளை அதிகரித்து மரபணு ஆய்வுகளையும் அதிகரிக்காவிட்டால் அடுத்த நான்கு வாரங்களில் நான்காவது அலை உருவாகலாம் என மருத்துவ ஆய்வு கூட விஞ்ஞான கல்லூரியின் தலைவர் ரவி குமுதேஸ் எச்சரித்துள்ளார்.
தற்போது தோன்றிவரும் நிலைமை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,பிசிஆர் சோதனைகளை முன்னெடுப்பதற்கான திறனை அதிகரிக்குமாறு ஆய்வுகூட தொழிலாளர்கள் சுகாதார அமைச்சினை கோரி வருகின்றனர்.
மேலதிக பிசிஆர் சோதனை இயந்திரங்களிற்கான அவசியமில்லை சுகாதார அமைச்சு விரும்பினால் தற்போது உள்ளவற்றை வைத்தே சோதனைகளை அதிகரிக்கலாம்.
மாதிரிகளை பெறுவது மருத்துவமனைகளில் கூட குறைவடைந்துள்ளது,ஆபத்தான பகுதிகள் என கருதப்படும் இடங்களை சோதனை செய்து முன்கூட்டியே பரவலை தடுப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பது அவசியம்.
தவறும் பட்சத்தில் நாடு இன்னும் 4 வாரங்களில் 4 ஆவது கொரோனா அலைக்கு முகம்கொடுக்கும் அபாயமுள்ளதாக சுட்டிக்காட்டினார்.