தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்..!
கேப்பாபிலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட 15 பேர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான புதிய சட்டத்திருத்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,
உயர் கல்வித் துறை இராணுவ மயமாக்கப்படுவதை கண்டித்தும் நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் ஜோசப் ஸ்ராலின்
உள்ளிட்ட 33 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு
25 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்துக்கு தனிமைப்படுத்தலுக்காக
அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால், இவர்களது விடுதலையைத் தொடர்ந்து
தற்போது முடங்கியுள்ள இணைவழிக்கல்வி சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.