கொக்கிளாய் இறங்குதுறை தமிழர்களுக்கு சொந்தமானது நீதிமன்றம் தீர்ப்பு

முல்லைத்தீவு- கொக்கிளாய் இறங்குதுறைக்கான நிலம் தமிழ் மக்களுக்கே சொந்தமானது. அ தனை தமிழ் மக்களுக்கே வழங்கவேண்டும். என மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் நீதிமன்றின் இந்த உத்தரவு அமைச்சரவை தீர்மானங்களாலோ, வர்த்தமா ன அறிவித்தல்களாலோ எக் காலத்திலும் மீறப்படக்கூடாது. எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கொக்கிளாய் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான இறங்குதுறையை மீள அமைப்பதற்காக 2016ம் ஆண்டு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் கொக்கிளாய் பகுதியில் 150 மீற் றர் நீளமான கரையோர நிலம் வழங்கப்பட்டது.
இந்த 150 மீற்றர் நீளமான நிலத்திற்குள் த ங்களுடைய கரைவலைப்பாடுகள் உள்ளடங்குவதாக கூறி கொக்கிளாய் பகுதியில் அத்துமீறித் தங்கியிருந்து கடற்றொழில் செய்துவரும் சிங்கள மக்கள் குழப்பம் விளைவித்ததுடன், தமிழ் மீனவர்களுடன் தர்க்கம் புரிவதற்கும் முயற்சித்தனர்.
இதனை தொடர்ந்து மத்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சின் ஊடாக வந்ததாக கூறப்படும் அழுத்தத்தின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் இறங்குதுறை அமைக்க சென்ற தமிழ் மீனவர்களை எதிராளிகளாக கொண்டு முல்லை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக் கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றய தினம் மேற்படி வழக்கு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது கொக்கிளாய் இறங்குதுறைக்கான நிலம் தமிழ் மக்களுக்கே சொந்தமானது.
அந்த நிலத்தை கரைதுறைப்பற்று பிரதேச செயலர் மற்றும் நில அளவை திணைக்களம் ஆகியன உடனடியாக அளவீடு செய்து மீனவர்களுக்கு வழங்கவேண்டும் எனவும், நீதிமன்றில் இந்த உத்தரவை அமைச்சரவையோ, வர்த்தமான அறிவித்தல்களோ எக்காலத்திலும் மீறக்கூடாது எனவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.