பாடசாலை ஆசிரியர்களுக்கான தடுப்பூசி வழங்கல் தொடர்பாக கல்வியமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
பாடசாலை ஆசிரியர்களுக்கான தடுப்பூசி வழங்கல் தொடர்பாக கல்வியமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு!

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் 86 வீதம் நிறைவடைந்துள்ளதாக கூறியிருக்கும் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அடுத்த 10 நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் எனவும் 4 வாரங்களுக்குள் 2வது டோஸ் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். 

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை விரைவாக திறக்க எதிர்பார்த்துள்ளோம். இணையவழி கல்வி வகுப்பறை கல்விக்கு நிகராக அமையாது. தொலை நோக்கு கல்வி முறைமை பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வை மாத்திரம் வழங்கும். 

பாடசாலைகளை திறக்கும் முதற்கட்டமாக ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூடு செலுத்தும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது. இதற்கமைய ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இதுவரையில் 86 சதவீதம் நிறைவுப் பெற்றுள்ளன.

நாடு தழுவிய ரீதியில் ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் 10 நாட்களுக்குள் நிறைவு பெறும். நான்கு வார காலத்திற்கு பிறகு இரண்டாம்கட்ட தடுப்பூசியை வழங்க எதிர்பார்த்துள்ளோம். 

அத்துடன் பாடசாலை வெளிகள ஊழியர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு