SuperTopAds

பொலிஸாரை கூலிப்படையாக மாற்றியது யாருடைய தேவைக்காக? சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவி விலகவேண்டும் என போர்க்கொடி..

ஆசிரியர் - Editor I
பொலிஸாரை கூலிப்படையாக மாற்றியது யாருடைய தேவைக்காக? சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவி விலகவேண்டும் என போர்க்கொடி..

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அந்த பதவிக்கு பொருத்தமற்ற ஒருவர் என சுட்டிக்காட்டியிருக்கும் மக்கள் உரிமையை பாதுகாக்கும் இயக்கத்தின் உறுப்பினர் பத்ம தேரர், உடனடியாக பதவி விலகவேண்டும். என கோரியுள்ளார். 

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

 “சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸார், கூலிப்படைபோல் செயற்படுகின்றனர். நாட்டு மக்களை பயங்கரவாதிகளாகக்கருதி அவர்களை ஒடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்நிலைமை நீடித்தால் சர்வதேச மட்டத்தில் எமது நாடு அபகீர்த்திக்குள்ளாகும். இந்நிலைமைக்கு வழிசமைத்து கொடுப்பது யார்?சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் யாரின் தேவையை பூர்த்திசெய்கின்றார். 

அப்பதவிக்கு அவர் பொருத்தமற்றவர். எனவே, கௌரவமாக பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.