SuperTopAds

08 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 73 வயது வயோதிபர்

ஆசிரியர் - Admin
08 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 73 வயது வயோதிபர்

முல்லைத்தீவு சிலாவத்தை தியோ நகர் பகுதியில் உறவினர்களுடன் வாழ்ந்து வந்து சிறுமி மீது வயோதிபர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக சிறுமியின் உறவினர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கமைய நேற்று மாலை குறித்த 73 வயதுடைய வயோதிபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 08 வயதுடைய சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குற்றச்சாட்டில் கைதான வயோதிபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.