ஊடக சுதந்திரத்தை நசுக்க முயற்சி! - ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்.

ஆசிரியர் - Admin
ஊடக சுதந்திரத்தை நசுக்க முயற்சி! - ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்.

இலங்கை அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய முயற்சிப்பதாகவும், மக்களை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பத்தரமுல்லை, நாடாளுமன்ற வாயிலுக்கு முன்பாக சுகாதார வழிமுறைகளுக்கு இணங்க இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு, பதாதைகளை ஏந்தியவாறு அரசாங்கத்திற்கான எதிர்ப்பினை வெளியிட்டனர். 

இதன்போது, விவசாயிகள், மீனவர்கள், பெருந்தோட்டத்தொழிலாளர்கள், பொது மக்கள் என நாட்டின் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என இவர்களால் வலியுறுத்தப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு