க.பொ.த உயர்தர பரீட்சை அக்டோபர் மாதத்திலா? கலந்துரையாட வேண்டும் என்கிறது கல்வியமைச்சு..
ஒக்டோபர் மாதத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையை நடத்துவதா? ஒத்திவைப்பதா? என்பது குறித்து கலந்துரையாடலின் பின் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.இதேவேளை இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு அமர்ந்த மாணவர்களின் செய்முறைப் பரீட்சைகள்
விரைவில் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 2020 க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களின் பெறுபேறுகளை வழங்க முடியவில்லை. ஏனெனில் கீழைத்தேய, மேலைத்தேய இசை மற்றும் நாடகமும் அரங்கியலும்
போன்ற பாடங்களுக்கான செய்முறைச் பரீட்சைகள் இன்னும் நடத்தப்படவில்லை” என புத்திக பத்திரண எம்.பி. கூறினார். நாம் விரைவில் செய்முறை பரீட்சைகளை நடத்த முயற்சிப்போம்” என அமைச்சர் பீரிஸ் பதிலளித்தார்.