SuperTopAds

மகன், மகளை ஏரியில் தள்ளி கொன்று தாயும் தற்கொலை!!

ஆசிரியர் - Editor II
மகன், மகளை ஏரியில் தள்ளி கொன்று தாயும் தற்கொலை!!

இந்தியா பெங்களு+ர் மண்டியா பகுதியில்  அருகே, குடும்ப தகராறில் மகன், மகளை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தானும் ஏரியில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த கிரீஸ், சின்சான தம்பதியினருக்கு மகேந்திரா (வயது 6), திம்பனா (வயது 4) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சின்சனா மனமுடைந்து வாழ்ந்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சின்சனா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

இதனால் மனமுடைந்த சின்சனா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்துவிட்டால் தன்னுடைய குழந்தைகள் அனாதையாகி விடுவார்கள் என்று நினைத்த அவர், தனது குழந்தைகளையும் கொன்றுவிட திட்டமிட்டார். 

அதன்படி நேற்று முன்தினம் காலையில் குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் கிராமத்தையொட்டி உள்ள ஏரிக்கு சென்றார். 

அங்கு ஏரியில் தனது மகன் மற்றும் மகளை தள்ளி கொலை செய்த பின்னர் தானும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர்.