நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பசில் ராஜபக்ஸ! வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவுள்ளது, ஆவணங்கள் அச்சு கூட்டுதாபனத்திடம்..
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான வர்த்தமானி வௌியிடுவதற்கான ஆவணங்கள் அரச அச்சக கூட்டுத்தாபனதிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த வர்த்தமான அறிவிப்பு அரச அச்சக கூட்டுத்தாபனதிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பசில் ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமான அறிவிப்பு வௌியானதன் பின்னர் நாளை (08)
அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தொியவருகின்றது.