SuperTopAds

15 வயது சிறுமி விவகாரம்! கைது செய்யப்பட்ட மருத்துவர் கடற்படை அதிகாரியாம், பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
15 வயது சிறுமி விவகாரம்! கைது செய்யப்பட்ட மருத்துவர் கடற்படை அதிகாரியாம், பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

இணையதளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட 15 வயதான சிறுமியை துஸ்பிரயோகம் செய்த  சம்பவத்தில் இன்று கைது செய்யப்பட்டிருக்கும் மருத்துவர் 

வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் பணியாற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் தர கடற்படை அதிகாரியும் என பொலிஸார் கூறியிருக்கின்றார். 

குறித்த வைத்தியர், தலா 15,000 ரூபா பணத்தை செலுத்தி, இரு சந்தர்ப்பங்களில் குறித்த 15 வயது சிறுமியை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை 

விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட வைத்தியரும் மற்றொரு நபரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக 

பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பில் இதுவரையில் 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக 

பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.