பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதே இல்லை! முறைப்பாடுகள் தொடர்வதாக பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை..
மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளின்போது சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மதிக்காமல் நடந்து கொள்வதை அவதானிக்க கூடியதாக உள்ளதென பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, பொது மக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கையின் போது சுகாதார வழிமுறைகளைச் சரியான முறையில் பின்பற்றாத நிலை காணப் படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொது போக்குவரத்து சேவைகளின் செயற்பாட்டின் போதும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வியாபார வளாகங்கள் போன்ற இடங்களில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளைச் சரியான முறையில் பின் பற்றாத சூழ்நிலை காணப்படுவதாக
அந்த தகவல் வெளியாகியுள்ளதாக அஜித் ரோகண தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில்
மேலும் 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 47,922 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.