15 வயது சிறுமி விவகாரம்! மருத்துவர், தொழிலாதிபர், துறவி தொடக்கம் ஆட்டோ சாரதிவரை கைது! சுமார் 300 பேர் கைது செய்யப்படுவர்..
இணையதளம் ஊடாக 15 வயது சிறுமி பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் இருதய நிபுணரான மருத்துவர் ஒருவர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 34 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜூன் 7 ஆம் திகதி முதல் கல்கிஸை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய
நேற்று வரை கைதுசெய்யப்பட்ட 32 சந்தேக நபர்களில் அவரது தாயும் உள்ளடங்குவார். அது தவிர மருத்துவர், முச்சக்கர வண்டி சாரதி, கார் சாரதி, துறவியொருவர், ஒரு மாணிக்க தொழிலதிபர்,
மிஹிந்தலை பிரதேச சபையின் துணைத் தலைவர், ஒரு கப்பலின் கேப்டன், மாலைத்தீவு பிரஜை, வலைத்தள உரிமையாளர்கள் இருவர், ஒரு ஹோட்டல் முகாமையாளர் மற்றும் விளம்பரத்தை வடிவமைத்தவர்
ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை குறித்த 15 வயது சிறுமி விவகாரத்தில் சுமார் 300 பேருக்கு தொடாபுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவரான பேராசிரியர் முதித்த வித்தியாபத்திரன
கூறியிருப்பதுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.