கரும்புதோட்ட காணி மக்களுக்கு இல்லை. திட்டவட்டமாக கூறிய வடக்கு முதலமைச்சர்.

ஆசிரியர் - Editor I
கரும்புதோட்ட காணி மக்களுக்கு இல்லை. திட்டவட்டமாக கூறிய வடக்கு முதலமைச்சர்.

கிளிநொச்சி கரும்புதோட்ட காணியை மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் வழங்க இயலாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் உறுதிபட தெரிவித்திருக்கும் நிலையில், மக்களுக் கே வழங்கவேண்டும். முதலமைச்சர் தனது தீர்மானத்தை மாற்றியமைக்கவேண்டும் என வடமாகாண சபையில் இன்று உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வடமாகாணசபையின் 109வது அமர்வு இன்று நடைபெற்றது. இதன்போது கரும்பு தோட்ட காணி தொடர் பாக 108வது அமர்வில் தாம் இல்லாத சமயம் பேசப்பட்டமை தொடர்பாக அவைக்கு எழுத்துமூல விளக்க ம் ஒன்றை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஊடாக சபைக்கு சமர்பித்திருந்தார். இதற்கு உறுப்பினர் கள் கருத்து தெரிவிக்கையில், முதலாவதாக மாகாணச

பை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கருத்து தெரிவித்தார். கிளிநொச்சியில் அரை ஏக்கர் காணியில் ஒரு பெ ண் 18 மாடுகளை வளர்த்து வருகின்றார். ஆனால் சாணகத்தில் கால் படாதவர்களுக்கு எப்படி 200 ஏக்கர் காணியை கால்நடை வளர்ப்புக்கு என முதலமைச்சர் வழங்கினார்? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் த.குருகுல

ராஜா கூறுகையில் முதலமைச்சர் தனது தீர்;மானத்தை மாற்றியமைத்து காணி அற்ற மக்களுக்கு அந்த காணியை பிரித்து வழங்கவேண்டும் என கூறியதுடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார். இந்நிலையில் மக்களுக்கு அந்த 200 ஏக்கர் காணியை பிரித் து வழங்க இயலாது வேண்டுமானால் மாற்று காணிகள்

வழங்கலாம் என முதலமைச்சர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்நிலையில் மேற்படி காணியின் பங் குதாரர்கள் யார்? செலுத்தப்பட்ட முதல் எவ்வளவு? நோக்கு இலக்கு மாற்றப்பட்டது எப்படி? இனிமேல் போடப்படும் முதல்எவ்வளவு? வேறு யாருக்காவது குத்தகைக்கு காணி வழங்கப்பட்டதா? என ஆராய்ந்து அடுத்த அமர்வில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்

வரன் பதிலளிக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டு அவை தலைவர் சீ.வி. கே.சிவஞானம் ஊடாக மேற்படி கேள்விகள் அடங்கிய கடிதம் முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு