SuperTopAds

மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை ஜீலை 19ம் திகதிவரை நீடிக்க காரணம் இதுதான்! நாட்டில் கொரோனா அபாயமும் நீடிக்கிறது..

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை ஜீலை 19ம் திகதிவரை நீடிக்க காரணம் இதுதான்! நாட்டில் கொரோனா அபாயமும் நீடிக்கிறது..

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை ஜீலை மாதம் 19ம் திகதிவரை நீடிக்கப்படும் என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்திருக்கின்றார். 

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பயணத்தடை நாளை 5ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா அபாயம் தொடரும் நிலையிலும், 

புதிதாக டெல்ட்டா திரிபு வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ள நிலையிலும் சுகாதார முற் பாதுகாப்பு நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.