SuperTopAds

டெல்ட்டா வகை திரிபு வைரஸ் பரவலுக்கு அரசு காரணமல்ல! 25 மாவட்டங்களிலும் பீ.சி.ஆர் பரிசோதனை செய்கிறோம், சுகாதார அமைச்சு விளக்கம்..

ஆசிரியர் - Editor I
டெல்ட்டா வகை திரிபு வைரஸ் பரவலுக்கு அரசு காரணமல்ல! 25 மாவட்டங்களிலும் பீ.சி.ஆர் பரிசோதனை செய்கிறோம், சுகாதார அமைச்சு விளக்கம்..

டெல்ட்டா வகை திரிபு வைரஸ் நாட்டில் பரவியமைக்கு அரசாங்கம் பொறுப்பாளி அல்ல. அதேபோல் டெல்ட்டா திரிபு வைரஸ் சமூக தொற்றாக மாறியுள்ளது என்பதற்கு ஆதாரங்களும் இல்லை. என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார். 

சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தொிவித்திருக்கும் கருத்து தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், டெல்ட்டா திரிபு வைரஸ் நாட்டில் பரவியிருந்தாலும் அது சமூக தொற்றாக மாறியுள்ளதா?

என்பதை அறிந்து கொள்வதற்காக சுகாதார அமைச்சு 25 மாவட்டங்களிலும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடத்திக் கொண்டிருக்கின்றது. டெல்ட்டா திரிவு வைரஸ் பரவலை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகம் டெல்ட்டா வைரஸை இனங்காணும்

மரபணு பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் நிலையில் அது தொடர்பான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றார்.