இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் நில அதிர்வு! அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவிப்பு..
இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டிருக்கும் நிலையில் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புக்கள் இல்லை. என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கடல் பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 5.2 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
காலியில் இருந்து 766 கிலோமீற்றர் தூரத்தில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் உள்ள கடலடித்தளத்தில் இவ்வாறு நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் ஆழிப்பேரலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.