அடுத்த 10 நாட்களில் டெல்ட்டா வகை ஆபத்தான வைரஸ் நாடு முழுவதும் பரவும் அபாயம்! கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை..
நாட்டில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றாவிட்டால் அடுத்துவரும் 10 நாட்களில் டெல்ட்டா வகை திரிபு வைரஸ் நாடு முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக கொரோனா கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஸினி பெர்னாண்டோபுள்ளே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
60வயதிற்கு மேற்பட்டவர்களே அல்பா டெல்டா வைரசினால் அதிகளவு பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.இதன்காரணமாகவே முதியவர்களிற்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.நாட்டில் டெல்டா வைரஸ் பரவும் ஆபத்து குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரையில் 12 கர்ப்பிணிப்பெண்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.