SuperTopAds

மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து தடை தொடரும்! அனுமதி வழங்க மறுக்கும் தேசிய கொவிட் தடுப்பு செயலணி..

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து தடை தொடரும்! அனுமதி வழங்க மறுக்கும் தேசிய கொவிட் தடுப்பு செயலணி..

மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவையினை தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், மாகாணங்களுக்குள் பேருந்து மற்றும் ரயில் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை மற்றும் ரயில் சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கொரோனா ஒழிப்பு செயலணி இதுவரை அனுமதி வழங்கவில்லை. பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருந்தாலும் 

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்ந்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.செயலணி மீள அறிவிக்கும் வரை, இந்த நடைமுறை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாளை காலை முதல் மாலை வரை சேவையில் ஈடுபடும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.காலை மற்றும் மாலை வேளைகளில் சேவையில் ஈடுபடும் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை 

56 வரை அதிகரிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர், போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.