முகநுாலில் பதிவு போட்டதற்காக இருவரை கடத்தி சென்று சித்தரவதை செய்த கும்பல்! விசாரணைகள் தீவிரம்..
முகநுாலில் பதவிட்டமைக்காக இருவரை கடத்திச் சென்று மிக குரூரமான சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, நபர் ஒருவருக்கு எதிராக முகநுாலில் பதிவு போடப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து அந்த பதிவைபோட்ட இருவர் கடத்திச் செல்லப்பட்ட மிக மோசமானமுறையில்
சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அம்பிட்டிய பகுதியில் இருவரையும் கடத்திய நபர்கள் அவர்களை பல்லேகல பலாகொட பகுதிக்கு கொண்டுவந்து சித்திரவதை செய்துள்ளனர் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 25 ம் திகதி தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 30 வயது முக்கிய நபரும் ஏனையவர்களும் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.