1ம், 2ம் அலைகளைபோல் அல்ல 3ம் அலையினால் நாட்டில் பாரதுாரமான சூழ்நிலை உருவாகியுள்ளது! நிலமையை சீர் செய்யவே நாட்டை முடக்குகிறோம்..

ஆசிரியர் - Editor I
1ம், 2ம் அலைகளைபோல் அல்ல 3ம் அலையினால் நாட்டில் பாரதுாரமான சூழ்நிலை உருவாகியுள்ளது! நிலமையை சீர் செய்யவே நாட்டை முடக்குகிறோம்..

மக்களின் அலட்சியத்தினாலேயே நாட்டில் கொரோனா 3ம் அலை உருவானதாக கூறியிருக்கும் ஜனாதிபதி முன்னய 1ம், 2ம் அலைகளை போல் அல்லாமல் நாட்டின் தற்போதிருக்கும் நிலை மிக பாரதுாரமானது எனவும் எச்சரித்துள்ளார். 

நாட்டு மக்களுக்கு நேற்று வழங்கிய சிறப்புரையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு சுட்டிக் காட்டியிருக்கின்றார். இதனபோது மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவதற்கு, 

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறுக்கமான சட்டங்களை, மக்கள் பொறுப்புடன் கடைபிடிக்க வேண்டும். இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறும் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து கவனத்திற்கொண்டு செயற்படுமாறும் 

ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், பொதுமக்கள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தருவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.எவ்வாறான போதும், இரண்டாவது அலையையும் இந்த ஆண்டின் முதற்பகுதியிலேயே 

நாம் பெருமளவு கட்டுப்படுத்தி இருந்தோம். சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியில், பெருமளவு மக்கள், கூட்டம் கூட்டமாகப் பயணங்களை மேற்கொண்டதன் விளைவாக, கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைக்கு 

முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தற்போது, பல வைரஸ் திரிபுகள் நாட்டுக்குள் உருவாகி இருப்பதுடன், வேகமாகவும் அந்த வைரஸ்கள் பரவி வருவதால், முன்னைய நிலைமைகளைப் பார்க்கிலும் பாரதூரமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

வைரஸ் வேகமாகப் பரவி, தொற்றாளர்களின் அளவு துரிதமாக அதிகரிக்கின்றபோது, அதற்கு விரைவாக முகங்கொடுப்பதற்கு, சுகாதாரத் துறைக்கு உள்ள மனித வளங்களும் ஏனைய வசதிகளும் போதுமானதாக இல்லை.

தனால், நாட்டை மீண்டும் முடக்கவேண்டி சூழ்நிலை, அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.இத்தகைய தொற்றுப் பரவல் நிலைமைகளுடன் மேற்கொள்கின்ற போராட்டத்தில், உலகின் ஏனைய பல நாடுகளும் நாமும், 

அவ்வப்போது நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அந்தத் தீர்மானத்தின் பக்க விளைவுகளையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு