“டெல்ட்ட்டா” வகை திரிபு வைரஸ் நாட்டை மிகப்பெரும் நெருக்கடிக்குள் தள்ளும்! மக்கள் ஆபத்தை உணரவேண்டும், கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை..
நாட்டில் “டெல்ட்டர்” வகை திரிவு வைரஸ் பரவல் ஆரம்பிக்குமானால் பாரிய நெருக்கடியை நாம் சந்திக்க நோிடும் என கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே கூறியிருக்கின்றார்.
இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது. உலகளவில் இந்திய டெல்ட்டா வகை திரிவு வைரஸ் வேகமாக மாற்றமடைவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அல்பா என்ற வைரஸ் தொற்றுக்கு முகங் கொடுத்து வருகின்றோம். அத்துடன், மரணங்களும், தொற்றாளர் எண்ணிக்கையும் 50 சத வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில், சுகாதார துறையும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
எனினும், அரசு இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க சுகாதாரத்துறையை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. பி.சி.ஆர். பரிசோதனை செய்வதற்காக ஒரு நாளைக்கு 7 கோடி 20 இலட்சம் ரூபா பணம் செலவிடப்படுகின்றது.
இதுவரை 15 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் வைரஸ் பரவல் மாறிக்கொண்டுள்ளது. இதில் தற்போது பரவிவரும் இந்தியாவின் டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்
என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே, நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதற்காக அனைவரும் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.