ஆபத்தான டெல்ட்டா திரிபு வைரஸ் நாட்டின் பல பகுதிகளுக்கு பரவியிருக்கலாம்..! பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
ஆபத்தான டெல்ட்டா திரிபு வைரஸ் நாட்டின் பல பகுதிகளுக்கு பரவியிருக்கலாம்..! பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அதிர்ச்சி தகவல்..

டெல்ட்டா வகை திரிபுபட்ட கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளிலும் பரவியிருக்கலாம். என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. 

பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கச் செயலாளர் எம் பாலசூரிய இதனை தெரிவித்துள்ளார். டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்ட பலர் அடையாளம் காணப்படாத நிலையில் 

சமூகத்திற்குள் நடமாடக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும் வீதிகளில் பொதுமக்களைக் காண முடிந்தது. 

ன அவர் தெரிவித்துள்ளார். இது வைரஸ் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களின் சகாக்களுடன் பொதுமக்கள் தற்போது தொடர்புகொண்டிருக்கலாம் 

எனத் தெரிவித்துள்ள அவர் தொடர்பிலிருந்திருக்கக் கூடியவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக டெல்டா வைரஸ் சமூக்தில் பரவியிருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. போக்குவரத்து தடைகள் நீக்கப்பட்டதும் 

பொதுமக்கள் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தத் தொடங்குவார்கள். அது வைரஸ் மேலும் பரவுவதற்கு வழிவகுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு