SuperTopAds

பயணத்தடை தளர்வின்போது மக்கள் நடந்துகொள்ளும் விதம் கவலையளிக்கிறது..! இந்நிலை நீடித்தால் அடுத்த இருவாரங்களில் நாடு பேராபத்தை சந்திக்கும்..

ஆசிரியர் - Editor I
பயணத்தடை தளர்வின்போது மக்கள் நடந்துகொள்ளும் விதம் கவலையளிக்கிறது..! இந்நிலை நீடித்தால் அடுத்த இருவாரங்களில் நாடு பேராபத்தை சந்திக்கும்..

பயணத்தடை தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் நடந்து கொண்ட விதம் கவலையளிப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

நாட்டில் டெல்டா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நேரத்தில் மக்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவது அவசியமான ஒன்றாகும். 

என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.ஒரு மாதத்தின் பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் 

பல இடங்களில் பொதுமக்கள் பெருமளவில் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் நடமாடினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு நாட்களும் இதேமாதிரியான நிலை காணப்பட்டால் அடுத்த இரண்டுவாரத்திற்கு நாடு ஆபத்தான நிலையை எதிர்கொள்ளவேண்டி வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.