கடனட்டைகளை பயன்படுத்தி 2 நாட்களில் 7 லட்சத்தி 87 ஆயிரம் மோசடி! சீன பிரஜை உட்பட 4 பேர் கைது..
போலியான கடனட்டைகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சீன நாட்டவர் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
ஒன்லைனில் பொருட்கள் வழங்கும் நிறுவனம் அளித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் ஒன்லைன் மூலம் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை முன்பதிவு செய்ததாகவும் பின்னர் கட்டணம் வசூலிக்கச் சென்றபோது அந்த அட்டைகளில் பணம் இல்லை என தெரிய வந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்கள் போலி கடன் அட்டைகளைத் தயாரிப்பது விசாரணையில் தெரிய வந்த நிலையில், அவர்களிடம் இருந்து சுமார் 30 போலி கடன் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் ஒன்லைன் மூலம் பெறப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட நபர்களால் மறுவிற்பனை செய்யப்பட்டமையும் விசாரணைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும் சந்தேக நபர்கள் இரண்டு நாட்களுக்குள்
787,000 ரூபாய் மோசடி செய்ததாகவும் சந்தேக நபர்கள் கண்டி, வரக்காபொல மற்றும் கல்கிசையில் வாசிப்பார்வைகள் என்றும் அஜித் ரோஹண தெரிவித்தார்.