இலங்கையில் சிங்கம் மற்றும் வரிக்குதிரைக்கு கொரோனா தொற்று உறுதி..! பரிசோதனை நடவடிக்கைகளுக்காக இந்தியாவுடன் பேச்சு..
கொழும்பு - தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் சிங்கம் ஒன்றுக்கும், வரிக்குதிரை குட்டி ஒன்றுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சு பரிசீலனைகளை மேற்கொள்கிறது. தொற்றுறுதியான சிங்கம் 3 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால்,
மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல் மற்றும் தொண்டை நோயினால் சிங்கம் அவதியுறுவது கண்டறியப்பட்டுள்ளது.
பின்னர் பேராதனை கால்நடை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சிங்கத்தின் சளி மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து இந்தியாவுடன் பேசி பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்