இலங்கையில் உச்சம் பெற்ற கொரோனா மரணம்! ஒரு நாளில் 101 பேர் மரணம், 30 பேர் வீடுகளிலேயே உயிரிழந்த அவலம்..
நாட்டில் கொரோனா தொற்றினால் நேற்றய தினம் மட்டும் சுமார் 101 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன்,
கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ள நிலையில் , ஒரே நாளில் நூற்றுக்கும் அதிகமான கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் நாளொன்றில் நூறுக்கும் அதிக கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
101 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2011 ஆக உயர்வடைந்துள்ளதாக
தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 53 ஆண்களும் 48 பெண்களும் உள்ளடங்குவதோடு , 30 பேர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் கடந்த பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் முதலாம் திகதி இடம்பெற்ற மரணங்கள் கொவிட் தொற்றினால் ஏற்பட்டவை என்று
நேற்றைய தினமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. ஏனைய மரணங்கள் மே மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூன் 9 ஆம் திகதி வரை பதிவானவையாகும்.