நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உச்சம் தொட்டது! அதிகரிக்கப்பட்ட புதிய விலைப்பட்டியலும் வெளியானது..

ஆசிரியர் - Editor I
நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உச்சம் தொட்டது! அதிகரிக்கப்பட்ட புதிய விலைப்பட்டியலும் வெளியானது..

நாட்டில் எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் அதிகரிப்பு செய்யப்பட்டிருப்பதாக வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. 

மேலும் லங்கா ஐஓசி எரிபொருட்களின் விலையும் குறித்த அறிவிப்பின் பிரகாரம் அதிகரிக்கப்படுகிறது. புதிய விலையின்படி, 

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 157 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 23 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 184 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 111 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 144 ரூபாய்க்கு விற்கப்படும்.அத்துடன், 

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 7 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Radio