பயணத்தடை தளர்த்தப்படும்போது புதிய சுகாதார வழிகாட்டுதல் நடைமுறைக்குவரும்! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பயணத்தடை தளர்த்தப்படும்போது புதிய சுகாதார வழிகாட்டுதல் நடைமுறைக்குவரும்! இராணுவ தளபதி அறிவிப்பு..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை நீக்கப்பட்டதன் பின்னர் புதிய சுகாதார வழிகாட்டுதல் அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

புதிய வழிகாட்டுதல்கள் குறித்தும் புதிய கட்டுப்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது குறித்தும் சுகாதார துறையினர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினர் கூடிய ஆராயவுள்ளனர் என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும், பொதுபோக்குவரத்து சேவைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகள் குறித்து புதிய வழிகாட்டுதல்கள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்கு முன்னர்

பொதுமக்களிற்கு இது குறித்து அறிவிப்போம் எனவும் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Radio