திருமணம் செய்யாமல் ஆண், பெண் சேர்ந்து வாழ்வது தவறு!! -காதல் ஜோடிகளின் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்-
திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் லிவிங் இன் உறவு முறை என்பது ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்க கூடியதில்லை என பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அப்பகுதியை சேர்ந்த 19 வயதான பெண்ணும், 22 வயதான இளைஞரும் சேர்ந்து வாழ்வதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும், ஆனால் பெண்ணின் தாயாரிடம் இருந்து தங்களுக்கு அச்சுறுத்தல் வருவதாகவும் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
முறைப்பாட்டை விசாணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இது போன்ற வாழ்க்கை முறை ஏற்புடையது அல்ல என்கிற கருத்தை வெளியிட்டு அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.