ஒரு டோஸ் போட்டாலே போதும்: உருமாறிய கொரோனாவையும் கொல்லும்!! -ரஸ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அங்கீகாரம்!!

ஆசிரியர் - Editor II
ஒரு டோஸ் போட்டாலே போதும்: உருமாறிய கொரோனாவையும் கொல்லும்!! -ரஸ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அங்கீகாரம்!!

ரஸ்யா நாட்டில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு அந்நாட்டு அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது. 

அந்த நாட்டில் பரிசோதிக்கப்பட்ட இந்த மருந்தை ஏனைய கொரோனா தடுப்பூசிகள் போல இரண்டு டோஸ்கள் போடத் தேவையில்லை. ஒரே டோஸில் இது கொரோனா நோய்க்கு எதிராக 79 புள்ளி 4 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுவதாக அந்நாட்டு மக்களுக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்  நிரூபணம் செய்துள்ளன.

உடக நாடுகளில் தற்போது இனங்காணப்பட்டுள்ள அனைத்து வகையான கொரோனா உருமாற்ற வகைகளுக்கும் எதிராக இந்த தடுப்பூசி சிறப்பாக வேலை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு