கொரோனா வைரசை கொல்லும் முகக்கவசம்!! -ஆச்சரியப்பட வைக்கும் புதிய கண்டுபிடிப்பு-

ஆசிரியர் - Editor II
கொரோனா வைரசை கொல்லும் முகக்கவசம்!! -ஆச்சரியப்பட வைக்கும் புதிய கண்டுபிடிப்பு-

இந்தியாவின் குஜராத் மாநிலம் மாண்டியில் உள்ள ஐ.ஐ.டி. கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களால் புதிய வகை முக கவசம் ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது. 

இது ‘‘நானோ’’ தொழில் நுட்பத்தில் செயல்படக் கூடியதாகும். முக கவசத்தில் ஒரு சிறிய தடிப்பிலான வடிகட்டி இணைக்கப்பட்டிருக்கும். இந்த வடிகட்டி ‘மோலிபெடனும் சல்பைடு’ மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

அது சிறிய கத்தி போல செயல்படும். அதற்குள் கொரோனா வைரஸ் நுழையும் போது அதை இந்த வடிகட்டி தடுக்கும். மேலும் அதை மீறி நுழையும் கொரோனா வைரஸ்களை கத்திபோல செயல்பட்டு குத்திகொதறிவிடும். எனவே கொரோனா வைரஸ்கள் கொல்லப்படும்.

அந்த கத்தி தலை முடியின் தடிப்பின் ஆயிரத்தில் ஒரு மடங்குதான் இருக்கும். கொரோனா வைரஸ் 120 நானோ மீட்டர் அளவு கொண்டதாகும். அதில் 96 சதவீதத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த வடிகட்டிக்கு உண்டு.

முககவசத்தை சிறிது நேரம் வெயிலில் வைத்தாலே அது தானாக சுத்தப்படுத்தி விடும். மேலும் அதை 60 தடவைக்கு மேல் சலவை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த முககவசத்தை பேராசிரியர் அமித் ஜெய்ஸ் வால் தலைமையிலான குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பு தொடர்பிலான கட்டுரை அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி ஜேர்னலில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Radio