SuperTopAds

இணைய வழியில் பொருள் வாங்கும் செயலிகளுக்கு ஜூன் முதல் தடை!! -கூகுள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
இணைய வழியில் பொருள் வாங்கும் செயலிகளுக்கு ஜூன் முதல் தடை!! -கூகுள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு-

இணைய வழியில் பொருள்களை வாங்கும் செயலிகளுக்கு ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரு இயங்குதளங்களிலும் சொப்பிங் செயலிகள் ஜூன் மாதம் முதல் நீக்கப்படுவதாக கூகுள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தங்களது இணையத்திலேயே தேவையான பொருள்களை வாங்கும் வகையில் புதிய அம்சங்கள் வழங்கப்படும் என்று கூறிய அவர், கூடுதலாக சொப்பிங் டேப் என்ற ஒப்ஷன் வழங்கப்படுவதாகவும் அதில் செயலியில் பொருள்களை வாங்குவதைப் போன்றே தங்களது மின்னஞ்சலை பயன்படுத்தி பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்றார்.