சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின் பல புதிய கொரோனா கொத்தணிகள் உருவாக வாய்ப்புள்ளது..! ஆனால் அதனை 3ம் அலை என கூறமுடியாது..

ஆசிரியர் - Editor I
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின் பல புதிய கொரோனா கொத்தணிகள் உருவாக வாய்ப்புள்ளது..! ஆனால் அதனை 3ம் அலை என கூறமுடியாது..

சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுட்டிக்காட்டியிருக்கும் தொற்றுநோயியல் நிபுணர் சுடத் சமரவீர 3வது அலை உருவாகும் வாய்ப்பில்லை எனவும் கூறியள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், நாட்டில் சித்திரை புதுவருடத்தின் பின்னர் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பும் வாய்ப்பு அல்லது ஆபத்துள்ளது. ஆனால் அது 3வது கொரோனா அலையாக இருக்க முடியாது. 

கடந்த வருடம் கிறிஸ்மஸ் பண்டிகையின் பின்னரும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் அதனை கொரோனா அலை என எவரும் விழிக்கவில்லை. கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகளவில் நடமாடியதால்

பல கொரோனா கொத்தணிகள் உருவாகின, அதேபோன்று சித்திரை புத்தாண்டின் பின்னரும் பல கொரோனா கொத்தணிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஆனால் அதனை 3வது கொரோனா அலை என கூற முடியாது. என கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு