மக்களிடம் பொறுப்புணர்வே இல்லை..! கொரோனா 3ம் அலைக்கு சாத்தியம், நாடு ஆபத்தை எதிர்கொள்ளபோவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை..
சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஒழுங்கில் மக்கள் தீவிரமாக சுகாதார நடைமுறைகளை மீறுகிறார்கள். இதனால் பாரிய ஆபத்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியிருக்கின்றது.
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிப்பதன் காரணமாக புதுவருடத்தின் பின்னர் பாரிய கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளப்போகின்றனர். என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசியை வழங்வகுவதற்கான உறுதியான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை
மீண்டும் இலங்கையில் அதிகரிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.