அருகம்புல் சாற்றின் மருத்துவ குணங்கள்

ஆசிரியர் - Admin
அருகம்புல் சாற்றின் மருத்துவ குணங்கள்

** குறுகலான நீண்ட இலைகளையுடைய நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகை.

** அருகங்கட்டை உடல் தாதுவெப்பு அகற்றிக் தாகம் தனிப்பனாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், நோய் நீக்கி உடல் தேற்றியாகவும், தோகை காமம் பெருக்கியாகவும் செயற்படும்.

** கணுநீக்கிய அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மில்.லி அளவாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும். வெப்பம் தணியும், மாத விலக்குச் சிக்கல் நீங்கும்.

** கணுநீக்கிய அறுகம்புல் சமூலம் 30 கிராம் வெண்ணெய் போல் அரைத்துச் சமஅளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும். அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும்.

** அறுகம்புல் சமூலம் 30 கிராம், கீழாநெல்லிச் சமூலம் 15 கிராம் இவற்றை மையாய் அரைத்துத் தயிரில் கலக்கி காலையில் குடிக்க வெள்ளை, மேக அனல், உடல் வறட்சி, சிறுநீர்த் தாரையில் உள்ள புண்ணால் நீர்க்கடுப்பு, சிறு நீருடன் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.

** புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்தம் மூலம் குணமடையும். வேண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணி நேரம் கழித்துக் குளித்து வரச் சொறி, சிரங்கு, அடங்காத தோல் நோய், வேர்க்குரு, தேமல், சேற்றுப்புண், அரிப்பு(தினவு), வேனல் கட்டி தீரும்.

** அறுகம் வேர் 30 கிராம், சிறுகீரை வேர் 15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம் ஒரு லிட்டர் நீரில் சேர்த்துக் கால் லிட்டராகக் காய்ச்சி, பால், கற்கண்டு கலந்து பருக மருந்து வீறு தணியும். (மருந்து வீறு : கடும் மருந்துகளை உட்கொள்வதால் பல் சீழ்பிடித்து, வாய் வயிறு வெந்து காணப்படுதல்)

** அறுகு சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம் இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெயிலில் வைத்து 45, 90, 150 நாள்கள் தலையில் தடவி வரக் கண்நோய்கள் தீரும்.

** 1 கிலோ அறுகம் வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8 லிட்டர் நீரில் இட்டு 1 லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து 1 லிட்டர் நல்லெண்ணய் கலந்து அமுக்கராக் கிழங்கு, பூமிச் சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கிச் சிறுதீயில் பதமுறக் காய்ச்சி வடித்து எடுத்த எண்ணையை (அறுகுத்தைலம்) கிழமைக்கு ஒரு முறை தலையில் இட்டு அரைமணி கழித்துக் குளித்து வர வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவேப்பு, நீர்க்கடுப்பு ஆகியவை தீரும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு