கொவிட்-19 வைரஸை மக்கள் குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள்..! இன்னும் ஆபத்து நீங்கவில்லை, தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலை எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
கொவிட்-19 வைரஸை மக்கள் குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள்..! இன்னும் ஆபத்து நீங்கவில்லை, தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலை எச்சரிக்கை..

இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைவதால் அபாயம் இல்லை. என மக்கள் கருதக்கூடாதென தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலை மருத்துவர் ஹசித் அத்தநாயக்க கூறியிருக்கின்றார். 

மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள். ஆனால் அது மிக தவறான நடவடிக்கையாகும். நோய் பற்றிய சில விடயங்கள் இன்னமும் பரிசோதனை நிலையிலேயே உள்ளன.

அதனால் ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து எங்களிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அறிவே உள்ளது என குறிப்பிட்டுள்ளார். கொரோனாவைரசின் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எதிர்கொள்ளக்கூடிய நுரையீரல் மற்றும் உடலின் ஏனைய உறுப்புகள் தொடர்பான பாதிப்புகள் குறித்து 

ஆராய்ச்சிகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் நோய் பரவல் தொற்று குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவருட பொருட்கள் கொள்வனவில் ஈடுபடும்போது 

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு