செவ்வாயில் நில அதிர்வு!! -நாசாவின் ரோவர் தகவல்-
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கிளை நிறுவனமான ஜெட் புரோபல்யூசன் லேபரட்டரி, 'இன்சைட் ரோவர்' என்கிற சிறிய ரக ரோவர்-ஐ 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.
2 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தின்மீது அமர்ந்துள்ள அந்த ரோவார் அங்கு இருக்கும் முக்கிய தகவல்களைத் திரட்டி நாசா விஞ்ஞானிகளுக்கு அனுப்பிவந்தது.
இந்நிலையில் அந்த ரோவர் அண்மையில் செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு ஏற்படுவதை கண்டுபிடித்துள்ளது.
பூமியில் ஏற்படும் நில அதிர்வு போல செவ்வாய் கிரகத்திலும் 3.3 மற்றும் 5 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.