SuperTopAds

சீரகம் சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து?

ஆசிரியர் - Admin
சீரகம் சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து?

சீரகம் பல நோய்களை குணப்படுத்தும் மருந்து என்பது அனைவருக்கும் தெரிந்தது. அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சாகிவிடும் என்பது போல சீரகம் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தும் உண்டு.

சீரகத்தை அதிகளவில் நமது உணவில் சேர்த்துக் கொள்வதால், அது மிகப்பெரிய ஆபத்தை நமக்கு ஏற்படுத்தும்.

*சீரகம் மருத்துவ குணம் கொண்ட மசாலா வகையைச் சேர்ந்த ஒரு உணவுப் பொருள். எனவே இந்த சீரகத்தை காரவகை உணவுகள் தயாரிக்கும் போது அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.

நமது அன்றாட உணவுகளில் சீரகத்தை அதிகமாக சேர்த்து சாப்பிட்டால், ஏற்படும்பக்க விளைவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

சீரகத்தை அதிகமாக சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும். இதனால் அதிக அசிடிட்டி பிரச்சினை இருப்பவர்கள் சீரகத்தை மிதமாக அல்லது குறைவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. நம் உணவில் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதால், சிறுகுடலில் காற்று அதிகமாகி, அவை வாயின் வழியே வெளியேறும். இதனால் அடிக்கடி ஏப்பம் வரும் பிரச்சனைகள் உண்டாகிறது. அன்றாடம் நாம் சாப்பிடும் உணவில், நீண்ட காலமாக அதிகமாக சீரகம் எடுத்துக் கொண்டிருந்தால், சீரகத்தில் உள்ள எண்ணெய் எளிதில் ஆவியாகும் தன்மைக் கொண்டது. எனவே நமது உடம்பின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் அதிகமாக பாதிப்படையச் செய்யும்.

கர்ப்பிணிகள் தங்களின் உணவில் மிதமான சீரகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், கர்ப்பிணிகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கருசிதைவு அல்லது குறைபிரசவம் ஏற்படுகிறது. நமது அன்றாட உணவில் தினமும் சீரகத்தை சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையானவராக இருந்தால், அவர்களுக்கு, வயிற்றில் உப்புசம் அடைந்து, குமட்டல் வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிக அதிகமாக சீரகத்தை உட்கொண்டால், அவர்களுக்கு அதிக ரத்தப் போக்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.

உயர் ரத்த அழுத்தம் பிரச்சனையை போல நமது உடலில், ரத்த அழுத்தம் குறைவதாலும், நமது உடல் ஆரோக்கியமாக இருக்காது. எனவே சீரகம் அடிக்கடி தனியாக சாப்பிடுவதை குறைக்க வேண்டும். சீரகம் நமது உடம்பில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கச் செய்யும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது.