SuperTopAds

உள்ளங்காலில் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?

ஆசிரியர் - Admin
உள்ளங்காலில் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கும். குறிப்பாக இந்த எண்ணெய்கள் உடல் மற்றும் மனதை நன்கு ரிலாக்ஸ் செய்வதோடு, அதை சரியாக பயன்படுத்தினால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

அத்தியாவசிய நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்தும் சிறந்த வழிகளுள் ஒன்று தான் உள்ளங்காலில் தடவுவது. பலருக்கும் இரவில் படுக்கும் முன் நறுமண எண்ணெய்களை உள்ளங்காலில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பின் தூங்குவார்கள்.

இக்கட்டுரையில், தினமும் இரவில் உள்ளங்காலில் எண்ணெய் தடவுவது குறித்த சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மை #1: இரவில் படுக்கும் முன் உள்ளங்காலில் லாவெண்டர் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், தூக்கமின்மை பிரச்சனை நீங்கும். ஒருவேளை கிராம்பு அல்லது புதினா எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கி செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும். அதுவே யூகலிப்டஸ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், சுவாச பிரச்சனைகள் மற்றும் அலர்ஜி குணமாகும். மேலும் இது நுரையீரலையும் சுத்தம் செய்யும்.

உண்மை #2:அத்தியாவசிய நறுமண எண்ணெய்களை உள்ளங்காலில் தினமும் தடவி மசாஜ் செய்வதன் மூலம், நோயெதிர்ப்பு சக்தி வலிமையடையும், வலி குறையும், செரிமானம் சிறக்கும், மார்பு சளி குறையும், முதுமை தாமதப்படுத்தப்படும், உட்காயங்கள் குறையும், தசை வலி நீங்கும், தொற்றுகள் தடுக்கப்படும்.

உண்மை #3:நமது உள்ளங்காலில் 5 லேயர்கள் உள்ளன. இந்த லேயர்களில் எவ்வித மயிர்கால்களும் இல்லை. ஆகவே உள்ளங்காலில் அத்தியாவசிய நறுமண எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்யும் போது, அந்த எண்ணெய் உடலால் முற்றிலும் உறிஞ்சப்படும்.

உண்மை #4:உள்ளங்காலின் வழியே உடலால் உறிஞ்சப்படும் எண்ணெய் இரத்த நாளங்களில் வேகமாக நுழைந்துவிடும். ஆய்வு ஒன்றில், உள்ளங்காலில் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது, 20 நிமிடங்களில் உடல் முழுவதும் அந்த எண்ணெய் கலந்துவிடும் என தெரிய வந்துள்ளது.

உண்மை #5:உள்ளங்காலில் எவ்வித எண்ணெய் சுரப்பிகளும் இல்லை. அதனால் தான் உடலின் மற்ற பகுதிகளை விட, உள்ளங்காலில் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்யும் போது, வேகமாக எண்ணெய் உறிஞ்சப்படுகிறது.

உண்மை #6:நமது ஒவ்வொரு பாதங்களிலும் 70,000 நரம்புகள் முடிவடைகின்றன. அதனால் தான் பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம், உடலின் பல பிரச்சனைகள் குணமாகின்றன.

உண்மை #7:மற்ற எண்ணெய்களை விட அத்தியாவசிய நறுமண எண்ணெய்களில் உள்ள மருத்துவ குணங்கள், உடலின் பல பகுதிகளையும் விரைவில் அடைந்து, உடலில் உள்ள பிரச்சனைகளை குணமாக்கும் வேகத்தை அதிகரிக்கும்.

உண்மை #8:பொதுவாக உடலின் மற்ற பகுதிகளில் அத்தியாவசிய நறுமண எண்ணெய்களை நேரடியாக பயன்படுத்தக்கூடாது. ஏதேனும் ஒரு பொருள் அல்லது எண்ணெயுடன் தான் சேர்த்து பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது எரிச்சல் அல்லது இதர பக்கவிளைவுகளை உண்டாக்கும். ஆனால் உள்ளங்காலில் உள்ள தோல் தடிமனாக இருப்பதால், அவற்றை அச்சமின்றி நேரடியாகப் பயன்படுத்தலாம்.

உண்மை #9:முக்கியமாக அத்தியாவசிய நறுமண எண்ணெய்களை உள்ளங்காலில் தடவி மசாஜ் செய்வதன் மூலம், அதில் உள்ள மருத்துவ குணங்கள் கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தை தொல்லை செய்யாமல் இரத்த நாளங்களில் வேகமாக கலந்து பயனளிக்கும்.