புத்தாண்டு காலத்தில் கொரோனா தொற்று 3ம் அலை உருவாகும் ஆபத்து..! அபாயத்தை ஒப்புக் கொள்ளும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மக்களிடம் பொறுப்பில்லை..

ஆசிரியர் - Editor I
புத்தாண்டு காலத்தில் கொரோனா தொற்று 3ம் அலை உருவாகும் ஆபத்து..! அபாயத்தை ஒப்புக் கொள்ளும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மக்களிடம் பொறுப்பில்லை..

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் நாட்டில் கொரோனா தொற்று 3ம் அலை உருவாகும் ஆபத்து உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன அச்சம் தொிவித்திருப்பதுடன், பொதுமக்கள் பொறுப்பற்றிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

புதுவருடத்தை முன்னிட்டு பொருட்கொள்வனவிற்காக பெருமளவு மக்கள் வர்த்தக நிலையங்களின் முன்னாள் காணப்படுவதை ஏற்கனவே நாங்கள் பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகளால் கூட இதனை முற்றிலும் கட்டுப்படுத்தமுடியாது. 

என தெரிவித்துள்ள அசேல குணவர்த்தன கொரோனா வைரஸ் ஆபத்தினை தவிர்ப்பதற்கு பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டியது பொதுமக்களே என குறிப்பிட்டுள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு பொதுமக்களிற்கான பல சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிடவுள்ளதாக 

அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு