சட்ட சிக்கலை எதிர்கொண்டது கறுவா சிகரெட்..! தேசிய புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான ஆணைக்குழு விடாப்பிடி..
இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள கறுப்பாட்டையை அடிப்படையாக கொண்ட “லயன் ஹார்ட்” மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான ஆணைக்குழு சட்ட பிரிவின் தலைவர் விராஜ் பண்டாரநாயக்க கூறியுள்ளார்.
குறித்த சிகரெட் தயாரிப்பாளர்கள் ஆயுள்வேத திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சிடம் அனுமதி பெறவில்லை. இது நாட்டில் அமுலில் உள்ள புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான சட்டத்தை மீறும் செயலாகும். தயாரிப்பு தொடங்குவதற்கு முன்னர் இந்த அனுமதியை நடத்தியிருக்கவேண்டும்.
இந்நிலையில் குறித்த சிகரெட்டை உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்த அதிகாரம் நிறுவனத்திற்கு இல்லை என்று அவர் கூறினார். சிகரெட்டை உற்பத்தி செய்வதிலிருந்தும் விநியோகிப்பதிலிருந்தும் விலகுமாறு அறிவுறுத்துவதற்காக நிறுவனத்திற்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை
ஆணையம் அனுப்பியுள்ளதாக நாட்டாவின் சட்டத் தலைவர் தெரிவித்தார். இந்தச் சட்டம் பிற தயாரிப்புகளை கட்டாய ஒப்புதல் இல்லாமல் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்த வழிவகுக்கும் என்று விராஜ் பண்டாரநாயக்க கூறினார்.
“லயன் ஹார்ட்” கறுவாப்பட்டை அடிப்படையிலான சிகரெட்டை தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச க்டந்த புதன்கிழமை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார். வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் வீரவன்ஸா, கறுவாப்பட்டை அடிப்படையிலான சிகரெட்டுகளை தயாரிப்பதைத்
தடுக்க பல்வேறு நிறுவனங்கள் முயற்சித்த போதிலும், தொழில்துறை அமைச்சராக தயாரிப்புக்கு தனது ஆதரவை வழங்குவதாகக் கூறினார்.