செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் விண்கலம்!! -நாசாவிற்கு உடனடியாக அனுப்பிய படங்கள்-
நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதும் அங்குள்ள சில பகுதிகளை தனது கமெராவில் படம் பிடித்து அனுப்பிவைத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.
குறித்த விண்கலம் நேற்று வெள்ளிக்கிழமை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது என நாசா தெரிவித்துள்ளது.
நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தில் பங்கேற்று வழிநடத்திய பெருமை இந்திய வம்சாவளி விஞ்ஞானியான ஸ்வாதி மோகனுக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் அங்குள்ள பகுதியின் சில படங்களை தனது கேமராவில் படம் பிடித்து அனுப்பியது.