SuperTopAds

கொரோனாவே இல்லை என மார்தட்டும் வட கொரியா!! -பைசர் நிறுவன் தடுப்பூசி தொழில் நுட்பத்தை திருட முயன்றதால் பரபரப்பு-

ஆசிரியர் - Editor II
கொரோனாவே இல்லை என மார்தட்டும் வட கொரியா!! -பைசர் நிறுவன் தடுப்பூசி தொழில் நுட்பத்தை திருட முயன்றதால் பரபரப்பு-

அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடம் உள்ள கொரோனா தடுப்பூசி தொழில் நுட்பத்தை வட கொரியா திருட முயன்றதாக தென்கொரியா ஊடகங்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

வட கொரியாவில் தற்போது வரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை, பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு தரப்பிலிருந்து இதுவரை அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் வட கொரிய எதிர்பார்த்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் சிகிச்சையின் தொழில்நுட்ப தகவல்களைப் திருடுவதற்காக அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான பைசரின்  சர்வர்களை ஹேக் செய்ய வட கொரியா முயன்றது என தேசிய புலனாய்வு நிறுவனத்தை மேற்கோள் காட்டி தென் கொரியாவின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற புலனாய்வுக் குழுவின் மூடிய அறைக்குள் நடந்த கூட்டத்தில் மேற்படி தகவலை தேசிய புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.