SuperTopAds

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படம்!! -விண்ணிலிருந்து அனுப்பிய ஐக்கிய அமீரக விண்கலம்-

ஆசிரியர் - Editor II
செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படம்!! -விண்ணிலிருந்து அனுப்பிய ஐக்கிய அமீரக விண்கலம்-

ஐக்கிய அமீரக விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் புகைப் படத்தை அந்த நாடு முதல்முறையாக வெளியிட்டது.

வளைகுடா நாடுகளில் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி ‘நம்பிக்கை' என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

1.3 டன் எடை கொண்ட இந்த விண்கலம் ஜப்பானில் உள்ள தானேகசிமா விண்வெளி மையத்தில் இருந்து எச்-2ஏ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்டதன் பொன்விழான் நினைவாகவே குறித்த விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலையில் செலுத்தப்பட்டு, கடந்த 9 ஆம் ஆம் திகதி செவ்வாய் கிரத்தை அடைந்தது. அந்த கிரகத்தை 2 ஆண்டுகள் சுற்றி அந்த விண்கலம் ஆய்வுகள் மேற்கொள்ளும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.