முதல் முதலாக பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 6 வயதான சிறுவன் பாடசாலைக்கு அருகில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..!

ஆசிரியர் - Editor I

தரம் 1 பாடசாலை இன்று ஆரம்பமான நிலையில் தனது பாட்டியுடன் முதல்தடவையாக பாடசாலைக்கு சென்ற 6 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. 

குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் பதுளை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. பாட்டியுடன் பாடசாலை சென்று கொண்டிருந்த சிறுவன் மீது லொறி மோதியதில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

பாடசாலையில் தரம் ஒன்றில் அனுமதிப்பதற்கு, அச்சிறுவனை அவரது பாட்டி, கூட்டிச் சென்றுள்ளார். மேற்படி பாடசாலையை அண்மித்த வேளையில் எதிர்த் திசையில் வேகமாக வந்த லொறி பாட்டியையும், சிறுவனையும் மோதிச் சென்றுள்ளது. இ

வ்விபத்தில் சிறுவன் ஸ்தலத்திலேயே பலியானதுடன், பாட்டி படுகாயமுற்ற நிலையில், பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பதுளைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், லொறியின் சாரதியை கைது செய்து, 

 நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Radio