நான் மட்டும் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி போனவர்களின் கால்களை உடைத்திருப்பேன்..! மேர்வின் பிதற்றல்..

ஆசிரியர் - Editor I
நான் மட்டும் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி போனவர்களின் கால்களை உடைத்திருப்பேன்..! மேர்வின் பிதற்றல்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் நான் பொலிஸ் சீருடையில் இருந்திருந்தால் அங்கிருந்த அத்தனை பேருடைய கால்களையும் உடைத்து விரட்டியிருப்பேன். என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். பொன்னம்பலம் ராமநாதன் போன்ற தமிழ் கல்விமான்கள் கூட இதே நாட்டில்தான் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட இடத்தில் எங்கிருந்தோ வந்து 

பாராளுமன்றில் நுழைந்தவர்கள் செய்கின்ற எல்லாவற்றுக்கும் தலையாட்ட முடியாது. அனைவருக்கும் ஒரே நீதி இருக்க வேண்டும். சிங்கள மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இவற்றுக்கு எதிராக நாங்கள் போராட்டத்தில் குதிப்போம். 

என்னை யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம். உங்களுக்கு தலைமை வகிக்க நான் தயாராக இருக்கிறேன் என ஆதங்கம் கொண்ட மேர்வின் சில்வா, "ராஜபக்ஷக்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். 

தயவு செய்து முதுகெலும்பு உடைந்தவர்கள் போல் நடந்துகொள்ளாதீர்கள் என குறிப்பிட்டார். சிங்களவருக்கு பிடித்த மாதிரியோ தமிழருக்கு பிடித்த மாதிரியோ முஸ்லிம்களுக்கு பிடித்த மாதிரியோ ஆட்சி நடத்த அரசாங்கம் தேவையில்லை.

கொரோனாவால் இறந்த உடல்களை எரிப்பதா? புதைப்பதா? நேராக வைப்பதா? குறுக்காக வைப்பதா? என்பது பற்றி நாங்கள் பேச தேவையில்லை. அந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை சுகாதாரத்துறையிடம் ஒப்படையுங்கள். 

அவற்றை பற்றி முழுதாக அறிந்த வைத்தியர்களிடம் ஒப்படையுங்கள். நான் ஒரு தூய சிங்கள பௌத்தன். இது ஒரு சிங்கள பௌத்த நாடு. நாங்கள் புத்தரின் போதனைகளை பின்பற்றுவதால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்க கடமைப்பட்டிருக்கிறோம். 

அதற்காக அவர்கள் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என முன்னாளர் அமைச்சர் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு