வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ மாவீரர் நாள் இன்று உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ மாவீரர் நாள் இன்று உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ மாவீரர் நாள் இன்று உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ள துடன், பல இடங்களில் படையினருடைய மற்றும் படை புலனாய்வாளர்களுடைய அச்சுறுத்தல்க ளுக்கு மத்தியிலும் மாவீரர்களின் உறவினர்கள், பொதுமக்கள் இணைந்து 7 வருடங்களின் பின்னர் உணர்வுபூர்வமாக இந்த ஆண்டு மாவீரர்களுக்கான அஞ்சலிகளை செலுத்தியிருக்கின்றார்கள்.

போருக்கு பின்னர் கடந்த 7 வருடங்கள் மாவீரர் நாளை அனுட்டிப்பதற்கு தொடர்ச்சியான தடைக ளை அரசாங்கமும், அரசாங்க படைகளும் விதித்துவந்தன. இந்நிலையில் கடந்த வருடம் இடித்து அழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் ஓரளவுக்கு துப்புரவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் வடகிழக்கு மாகாணங்களில் படையினரால் இடித்து அழிக்கப்பட்டிருந்த சகல மாவீரர் துயிலுமில்லங்களும் துப்புரவு செய்யப்பட்டு மாவீரர் நாளுக்கான ஒழுங்கள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணி 5 நிமிடத்திற்கு மாவீரர்களுக்கான பிரதான ஈகைச் சுடர் மாவீரர்களுக்கான அஞ்சலி பாடலுடன் ஏற்றப்பட்டது. மாவீரர்களின் உறவினர்கள் உடைக்கப் பட்ட கல்லறை எச்சங்களின் முன்னால் தீபங்களை ஏற்றிக்கொண்டும், மலர்களை தூவியும் அஞ்சலிகளை செலுத்தினர்.

யாழ்.மாவட்டத்தில் கோப்பாய் மாவீரர் தயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம் மற்றும் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் மாவீரர்களுக்கான அஞ்சலிகள் செலுத்தப்பட் டுள்ளது.

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் படையினர் நிலை கொண்டிருக்கும் நிலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த இம்முறை படையினர் தடைவிதித்திருந்தனர். இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மாவீரர் நாள் துயிலுமில்லத்திற்கு அருகில் ஒரு இடத்தில் நினைவுகூரப்பட ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மாவீரர் துயிலுமில்லத்தின் அருகில் கூடியிருந்த மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல வாசலில் படையினரின் நெருக்கடிகளுக்கும் மத்தியில் உணர் வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

இதேபோல் வடகிழக்கு மாகாணங்கள் முழுவதும் மாவீரர்களுக் கான அஞ்சலி நிகழ்வுகள் இந்த ஆண்டு உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. படையினர் நிலைகொண்டிருக்காத சகல மாவீரர் துயிலுமில்லங்களிலும் மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்டிருக்கிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு